தொழில்நுட்பம்

ஹானர் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2018-11-02 06:21 GMT   |   Update On 2018-11-02 06:21 GMT
ஹூவாய் ஹானர் பிரான்டு ஹானர் வாட்ச் மேஜிக் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Honor #Smartwatch



ஹூவாய் ஹானர் பிரான்டு ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனுடன் ஹானர் வாட்ச் மேஜிக் ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பார்க்க ஹூவாய் வாட்ச் ஜி.டி. போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் டிஸ்ப்ளே சிறியதாக இருக்கிறது. 

ஹானர் வாட்ச் மேஜிக் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, டூயல்-கிரவுன் டிசைன், 9.8எம்.எம். மெல்லிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், பின்புறம் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாட்ச் மேஜிக் 316L கோல்டு ஃபோர்ஜ் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் சிலிகான் ஸ்டிராப் கருப்பு மற்றும் சிவப்பு என டூ-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இத்தாலிய லெதர் கொண்ட சில்வர் வெர்ஷனும் கிடைக்கிறது. பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் ட்ரூசென் 3.0 இதய துடிப்பு சென்சார், பயனர் ஓய்வு எடுக்கும் நேரம் மற்றும் துடிப்புடன் செயல்படும் நேரங்களில் டிராக் செய்யும்.



ஹானர் வாட்ச் மேஜிக் சிறப்பம்சங்கள்

- 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
- ARM M4 சிப்செட்
- 16 எம்.பி. ரேம்
- 128 எம்.பி. ரேம்
- ப்ளூடூத் 4.2
- 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ஜி.பி.எஸ்., குளோனஸ், கலீலியோ, என்.எஃப்.சி.
- 178 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹானர் வாட்ச் மேஜிக் பிளாக், சிலிகான் பேன்ட் வெர்ஷன் விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,500) என்றும் லெதர் பேன்ட் கொண்ட சில்வர் நிற எடிஷன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News