தொழில்நுட்பம்

இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி போன் விற்பனை துவங்கியது

Published On 2018-10-25 04:38 GMT   |   Update On 2018-10-25 04:38 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா 8110 4ஜி மொபைல் போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. #nokia8110


 
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதன் விற்பனை இந்தியாவின் பிரபல விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.

நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



நோக்கியா 8110 4ஜி சிறப்பம்சங்கள்:

- 2.4 இன்ச் 320x24 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 2015 பிராசஸர்
- அட்ரினோ 304 GPU
- 512 எம்.பி. ரேம்
- 4 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கை ஓ.எஸ். சார்ந்த ஸ்மார்ட் அம்சம்
- 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- ட்ரிப் பாதுகாப்பு (IP52)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 2.0
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 8110 4ஜி மொபைல் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய நோக்கியா மொபைல் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News