தொழில்நுட்பம்

தொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு

Published On 2018-10-23 04:52 GMT   |   Update On 2018-10-23 04:52 GMT
பயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity



ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது. 

ஃபேஸ்புக் சார்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அறியப்படாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்ற இருக்கும் நிறுவனம் பயனர் அக்கவுன்ட்களை பாதுகாப்பது, ஹேக்கிங் முயற்சிகளை கண்டறிந்து தெரிவிப்பது என பல்வேறு சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய நிறுவனத்தை கைப்பற்றும் பணிகள் எந்தளவு நிறைவுற்று இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2018-ம் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது. புதிய தகவல்கள் குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், புதிய நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும். சமீபத்திய ஹேக்கிங், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை சேர்த்து ஃபேஸ்புக் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Facebook #CyberSecurity
Tags:    

Similar News