தொழில்நுட்பம்

சக்திவாய்ந்த சிறப்பம்சங்களுடன் ரேசர் போன் 2 அறிமுகம்

Published On 2018-10-11 06:15 GMT   |   Update On 2018-10-11 06:15 GMT
ரேசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி தனது ரேசர் போன் 2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. #RazerPhone2



ரேசர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரேசர் போன் மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக ரேசர் போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது.

ரேசர் போன் 2 மாடலில் 5.72 இன்ச் குவாட் ஹெச்.டி. 120Hz அல்ட்ராமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேமிங் செய்யும் போது சிறப்பான கிராஃபிக்ஸ் அனுபவம் கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் ரேசர் போன் 2 மாடலில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் ரேசர் குரோமா RGB லோகோ இடம்பெற்று இருக்கிறது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரேசர் போன் 2 மாடல் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை, மாற்றாக 24-பிட் DAC ஆடியோ அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது. 8.5 எம்.எம். மெல்லிய வடிவமைப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் பிளஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



ரேசர் போன் 2 சிறப்பம்சங்கள்:

- 5.72 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. IGZO LCD அல்ட்ராமோஷன் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. கேமரா f/1.75 வைடு-ஆங்கிள் லென்ஸ், OIS, டூயல் PDAF 
- 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6 டெலிபோட்டோ லென்ஸ், சோனி IMX சென்சார், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
- முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 4 பிளஸ்
- வயர்லெஸ் சார்ஜிங்

ரேசர் போன் 2 மாடல் மிரர் மற்றும் சாட்டின் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.59,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News