தொழில்நுட்பம்

ஐபால் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-08-01 15:21 IST   |   Update On 2018-08-01 15:21:00 IST
ஐபால் நிறுவனத்தின் ஆசான் 4 ஃபீச்சர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபைல் போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #mobilephones


ஐபால் நிறுவனம் தனது ஆசான் சீரிஸ் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆசான் 4 என அழைக்கப்படும் புதிய மொபைல் போன் பெரிய திரை கொண்டிருப்பதால் முதியோருக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும் என ஐபால் தெரிவித்துள்ளது.

பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி மற்றும் டாக்கிங் கீபேட் உள்ளிட்டவை புதிய மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொபைல் வைத்திருப்போர் தவிர மற்றவர்கள் இதில் தங்களது சிம் கார்டை செருகினால் ஏற்கனவே மொபைலில் செட் செய்யப்பட்டு இருக்கும் மொபைலுக்கு எச்சரிக்கை செய்யும்.



ஐபால் ஆசான் 4 அம்சங்கள்:

– 2.31 இன்ச் டிஸ்ப்ளே
– பெரிய பட்டன் கொண் கீபேட்
– பிரெய்லி மற்றும் டாக்கிங் (பேசும்) கீபேட்
– எஸ்.ஓ.எஸ். அம்சம்
– டூயல் சிம் ஸ்லாட்
– மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி வரை மெமரி
– எஃப்.எம். ரேடியோ
– 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைவூட்டும் படி மெடிசின் ரிமைன்டர் வசதி சிறப்பான ஆடியோ தரம் இருப்பதால் காது கேட்பதில் சிறு கோளாறு இருப்பவர்களுக்கும் தெளிவாக கேட்க செய்யும் வகையில் ஹியரிங் ஏய்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பத்து இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் ரூ.3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Aasaan4 #mobilephones
Tags:    

Similar News