தொழில்நுட்பம்

ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-06-29 07:31 GMT   |   Update On 2018-06-29 07:31 GMT
ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் ஷாங்காய் நகரில் நடைபெறும் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனில் 5.34 இன்ச், 18:9 ஸ்கிரீன், குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம், கூகுளின் கோ செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த செயலிகள் குறைந்த மெமரியில் சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

இத்துடன் சோஷியல் மோட் எனும் போட்டோ எடிட் செய்யும் சூட் கொண்டிருக்கிறது. இதை கொண்டு புகைப்படங்களை எடிட் செய்து மிக வேகமாகவும், எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோ பூத் கொண்டு புகைப்படங்களை எடுத்து நண்பர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியும்.



ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
- 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் விஆர் ரோக் GE8100 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
- சிங்கிள் / டூயல் சிம்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்ஏஹெச் பேட்டரி

ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் புளு, ரோஸ் கோல்டு மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஜூலை மாதம் முதல் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் விலை 79 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.6,125) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News