தொழில்நுட்பம்
கோப்பு படம்

மேக் ஓ.எஸ். மோஜேவ் பீட்டா வெளியானது

Published On 2018-06-27 06:34 GMT   |   Update On 2018-06-27 06:34 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டெஸ்க்டாப் இயங்குதளமான மேக் ஓ.எஸ். மோஜேவ் முதல் பப்ளிக் பீட்டா வெளியிடப்பட்டுள்ளது.





மேக் ஓஎஸ் மோஜேவ் இயங்குதளத்துக்கான முதல் பப்ளிக் பீட்டாவை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எவ்வித பிழைகளும் இன்றி புதிய இயங்குதளத்தை பயன்படுத்த விரும்புவோர் மேக் ஓஎஸ் மோஜேவ் பப்ளிக் பீட்டாவை இன்ஸ்டால் செய்து, புதிய அம்சங்களை முயற்சிக்கலாம்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் டார்க் மோட், மேம்படுத்தப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் கொண்டிருக்கிறது. புதிய மேக் ஆப் ஸ்டோரில் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர், நான்கு புதிய செயலிகள் மற்றும் டெஸ்க்டாப்-ஐ முழுமையாக சுத்தம் செய்யும் புதிய ஆப்ஷன் சேர்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் மூலம் ஒரு க்ளிக் செய்தால் டெஸ்க்டாப் சுத்தம் செய்யப்பட்டு விடும்.

மற்ற அம்சங்களை பொருத்த வரை ஃபைன்டருக்கு புதிய வியூ மோட் வழங்கப்படுகிறது, இது முற்றிலும் மாற்றப்பட்டு ஐடியூன்ஸ்-இல் ஆல்பம் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய மேக் ஓஎஸ் மோஜேவ் மற்றும் இதர பப்ளிக் பீட்டா பதிப்புகளில் இருக்கும் பொதுவான அம்சம், இந்த இயங்குதளங்களினுள் முழுமை பெறாத ஆப்ஷன்கள் இருக்கும்.



பப்ளிக் பீட்டா மற்றும் பீட்டா பதிப்பு மென்பொருள்களில் பொதுவாக பல்வேறு பிழைகள் மற்றும் பிரச்சனைகள் இருக்கும், இவற்றை முடிந்தவரை சரி செய்யவோ அல்லது, பீட்டா பதிப்புகளில் இருக்கும் பிழைகளை முடிந்தவரை குறைக்க பல்வேறு நிறுவனங்களும் முயற்சிக்கின்றன.

உண்மையில் இயங்குதளங்களின் பீட்டா பதிப்புகள் பல்வேறு பயனர்கள் புதிய மென்பொருளை பயன்படுத்தி, அவற்றில் உள்ள பிழை மற்றும் பரிந்துரைகளை டெவலப்பர்களுக்கு தெரிவிக்கவே வழங்கப்படுகிறது. இதனால் வீண் பிழைகள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்க விரும்புவோர் தற்போதைய இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.

இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் மேக் ஓஎஸ் மோஜேவ் இறுதி வடிவம் பெற்ற இயங்குதளம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய இயங்குதளத்தின் முழுமையாக பயன்படுத்த நினைப்போர் மேலும் இரண்டு - மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
Tags:    

Similar News