தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் நோக்கியா X6

Published On 2018-06-23 06:14 GMT   |   Update On 2018-06-23 06:14 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.





நோக்கியா மொபைல் போன்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டது. 

நோக்கியாவின் முதல் நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட X6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ சர்வதேச வலைத்தளத்தில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் ஷாப் நௌ (Shop Now) பட்டனுடன் இடம்பெற்று பின் விரைவில் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், நோக்கியா X6 ஸ்மார்ட்போன் நோக்கியா மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. இந்திய வலைத்தளத்தில் மொபைல் போனின் யூசர் கைடு, ஸ்மார்ட்போனின் அனைத்து தகவல்களுடன் இடம்பெற்றிருந்தது. இதில், "இந்த ஸ்மார்ட்போன் மத்திய டெலிகாம் துறையின் அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.



நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்ஏஹெச் பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா , கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.14,800), 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.16,000), 6 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.18,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News