தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் புதிய ஐபேட் - இதெல்லாம் தெரியுமா?

Published On 2018-03-28 14:41 IST   |   Update On 2018-03-28 14:41:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அறிமுகமான பட்ஜெட் விலை ஐபேட் குறித்து இந்த தகவல்கள் தெரியுமா?
சிகாகோ:

ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய ஐபேட் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருள்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்விழாவில் கல்வி சார்ந்த பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர்களின் பணிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு ஏற்றதாகவும் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

எனினும் இவ்விழாவில் ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய ஐபேட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கூகுள் க்ரோம்புக் மற்றும் இதர விலை குறைந்த சாதனங்களுக்கு போட்டியாக புதிய ஐபேட் அமைந்துள்ளது. புதிய ஐபேட் மாடல்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிளின் விலை குறைந்த ஐபேட் மாடல்கள் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, தாய்லாந்து, துருக்கி மற்றும் இதர நாடுகளிலும் புதிய ஐபேட்  வெளியிடப்பட இருக்கிறது.



இந்தியாவில் புதிய ஐபேட் 32 ஜிபி வைபை மாடல் விலை ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் 32 ஜிபி, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.38,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் மாடல்களில் 9.7 இன்ச் ரெட்டினா ஸ்கிரீன், அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

டச் ஐடி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலில் ஐபோன் X போன்று ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. வீடியோ காலிங் செய்ய ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, பின்புறம் 8 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலில் ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. எனினும் புதிய பென்சில் வாங்க கூடுதலாக ரூ.7,600 செலுத்த வேண்டும். ஆப்பிள் பென்சிலுடன் பிரத்யேக செயலிகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் லாகிடெக் கீபோர்டு, கிரேயான் பென்சில் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சாதனங்களையும் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிள் பென்சில் ஐபேட் ப்ரோ சாதனங்களுக்கென அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய ஐபேட் ஆப்பிள் A10 ஃபியூஷன் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தையும் புதிய ஐபேட் வழங்குகிறது.

Similar News