அறிந்து கொள்ளுங்கள்

சியோமியின் புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - எந்த பிராசஸர் கொண்டிருக்கும் தெரியுமா?

Published On 2022-11-21 12:57 GMT   |   Update On 2022-11-21 12:57 GMT
  • சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய சியோமி ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடல் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிப்ஸ்டர் குபா வொசைசௌஸ்கி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் வெளிப்புறம் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் 855 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

"இந்த சாதனத்தின் விவரங்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. எனினும், ஸ்மார்ட்போனின் சில யூனிட்கள் பொது வெளியில் கசிந்துள்ளது," என குபா வொசைசௌஸ்கி தெரிவித்து இருக்கிறார். சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு பணிகளில் சியோமி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய 13 சீரிசில்- சியோமி, 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இவை முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இரு புதிய ஸ்மார்ட்போன்களில் சியோமி 13 ப்ரோ விவரங்களை டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருந்தார். அதில், புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இனஅச் E6 LTPO டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

சியோமி 13 ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் லெய்கா பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Photo Courtesy: Onleaks

Tags:    

Similar News