அறிந்து கொள்ளுங்கள்

வாட்டர் கூலிங் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் புது பிளே ஸ்டேஷன்?

Update: 2023-01-23 14:48 GMT
  • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் கன்சோல்கள் உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன.
  • சோனி கடைசியாக அறிமுகம் செய்த பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது.

சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடலை உருவாக்கும் பணிகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பிளே ஸ்டேஷன் 5 தற்போது புது வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகம் செய்ய சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எனினும், இதுவரை சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ வெளியீடு பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை.

2020 இறுதியில் சோனி பிளே ஸ்டேஷன் 5 அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ப்ரோ வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கன்சோல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ தான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.

டாப் எண்ட் மாடல் என்பதால் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதன்படி புது கன்சோலில் AMD நிறுவனத்தின் புதிய APU சிப்செட், டிசைனில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இதன் தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தில் மிக முக்கிய மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புது பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் வாட்டர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடல்களில் கூலிங் ஃபெயிலிங் மற்றும் லிக்விட் மெட்டல் லீக் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், இதன் மேம்பட்ட வெர்ஷனில் வாட்டர் கூல்டு முறைக்கு மாற சோனி முடிவு செய்திருக்கலாம்.

Tags:    

Similar News