அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் PS5 விலையை ரூ. 5 ஆயிரம் குறைக்கும் சோனி

Published On 2023-03-27 10:55 GMT   |   Update On 2023-03-27 10:55 GMT
  • சோனி நிறுவனத்தின் PS5 கன்சோல் விலை இந்தியாவில் குறைக்கப்பட இருக்கிறது.
  • விலை குறைப்பு PS5 அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

சோனி இந்தியா நிறுவனம் தனது PS5 கன்சோலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் PS5 கன்சோலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளம்பர சலுகையாக PS5 கன்சோல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வவரை விலை குறைப்பு வழங்கப்பட இருக்கிறது.

பிளே ஸ்டேஷன் இந்தியா அனைத்து PS5 வேரியண்ட்களுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கி, குறுகிய காலத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. சிறப்பு விளம்பர சலுகையின் கீழ் PS5 இந்திய விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ. 39 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என குறைக்கப்பட உள்ளது.

 

தற்போது PS5 விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும், PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 59 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விலை குறைப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் எஸ்சி, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.

2021 பிப்ரவரி வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே PS5 மாடலுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலை இருந்து வந்தது. 2022 ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் பத்து லட்சம் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டிப்ஸ்டரான ரிஷி அல்வானி தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் PS5 யூனிட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

Tags:    

Similar News