அறிந்து கொள்ளுங்கள்

விற்பனைக்கு வந்த 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள்

Update: 2022-11-28 09:29 GMT
  • உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
  • தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.

இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

Tags:    

Similar News