அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 198 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவித்த ஜியோ

Published On 2023-03-28 14:58 GMT   |   Update On 2023-03-28 14:58 GMT
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் பேக்கப் சலுகையை அறிவித்து இருக்கிறது.
  • முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையை பெறுவதற்கான குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

பிராட்பேண்ட் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ நிறுவனம் ரூ. 198 விலையில் மாதாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. பிராட்பேண்ட் பேக்கப் பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் நொடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

இதுவரை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இணைய மாதாந்திர கட்டணம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகை அறிவித்து இருப்பதோடு இணைய வேகத்தை நொடிக்கு 30 மெகாபைட் அல்லது 100 மெகாபைட் வரை உயர்த்திக் கொள்வதற்கான வசதியை வழங்குகிறது. இதற்கான கட்டணம் ஏழு நாட்களுக்கு ரூ. 21-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 152 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஃபிக்சட் லைன் பிராட்பேண்ட் சேவை பிரிவில் ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 84 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 30.6 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1490 கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டி இருக்கும். இதில் ஐந்து மாதத்திற்கான கட்டணம் மற்றும் இன்ஸ்டால் செய்வதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் மொபைல் கட்டணங்களை மாற்றியமைத்தது. பிரீபெயிட் பிரிவில் துவக்க சலுகைகளின் விலையை ஏர்டெல் அதிகரித்து இருக்கிறது. போஸ்ட்பெயிட் சலுகையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் 5ஜி போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News