தொழில்நுட்பம்

ஆசிய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

Published On 2018-12-26 11:19 GMT   |   Update On 2018-12-26 11:19 GMT
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
 


அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தலைமையிடமாக கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியாகி வருகிறது. மாதம் இருமுறை வெளியாகும் இந்த பத்திரிகையில் உலக சாதனையாளர்கள் பட்டியல் அடிக்கடி வெளியிடப்படுகிறது. 

அந்த வகையில் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

முதன் முறையாக முதல் 100 கோடீஸ்வரர்களில் 4 பெண் தொழிலதிபர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். 61 வயதாகும் இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.



கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 31 கோடி ரூபாய் ஆகும். நடப்பாண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.

முகேஷ் அம்பானியை தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் அசிம்பிரேம்ஜி 2 ஆவது கோடீஸ்வரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 47 கோடி ரூபாய் ஆகும். தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். 4 ஆவது இடத்தில் அசோக் லேலண்டின் இந்துஜா சகோதரர்கள், 5 ஆவது இடத்தில் பலோன்ஜி மிஸ்ட்ரி உள்ளார்.
Tags:    

Similar News