மொபைல்ஸ்

200MP கேமராவுடன் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன்

Update: 2022-10-05 05:12 GMT
  • சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சியோமி 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
  • இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் 1220 பிக்சல் க்ரிஸ்டல்ரெஸ் 120Hz OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனம் சியோமி 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் க்ரிஸ்டல்ரெஸ் 120Hz OLED டிஸ்ப்ளே, HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அடாப்டிவ் HDR, 68 பில்லியன் நிறங்கள், அடாப்டிவ்சின்க் வழங்கப்பட்டு இருக்கிறது. டிஸ்ப்ளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் ஆண்டி-கிளேர் கிளாஸ் உள்ளது.

சியோமி 12T ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 12T மாடலில் 108MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. சியோமி 12T ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

சியோமி 12T ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI13 உள்ளது. இது மட்டுமின்றி மூன்று ஆண்ட்ராய்டு ஒஎஸ், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஹைப்பர்சார்ஜ் வசதி உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சியோமி 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளாக், சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சியோமி 12T ஸ்மார்ட்போனின் விலை 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 340 என துவங்குகிறது. சியோமி 12T ப்ரோ விலை 749 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 ஆயிரத்து 455 என துவங்குகிறது. விற்பனை ஐரோப்பா மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிய சந்தைகளில் அக்டோபர் 13 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

Tags:    

Similar News