மொபைல்ஸ்

5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது டெக்னோ போன் - ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்

Published On 2022-09-28 04:07 GMT   |   Update On 2022-09-28 04:07 GMT
  • டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ் கொண்டிருக்கிறது.

டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் QHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி பிளாஷ், 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) மற்றும் ஹை ஒஎஸ் 8.6 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ பாப் 6 ப்ரோ அம்சங்கள்:

6.56 இன்ச் 1600x720 பிக்சல் HD+ வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்

IMG பவர்-விஆர் GE-கிளாஸ் GPU

2 ஜிபி ரேம்

32 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6

8MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

இரண்டாவது ஏஐ கேமரா

5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

4ஜி வோல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

5000 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பீஸ்ஃபுல் புளூ மற்றும் போலார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News