மொபைல்ஸ்

முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகமான கேலக்ஸி ஃப்ளிப் போன்

Published On 2023-10-16 17:09 IST   |   Update On 2023-10-16 17:09:00 IST
  • இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 ஆகும்.
  • இந்த ஸ்மார்ட்போனினை மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கிளாம்ஷெல் ரக ஃப்ளிப் போன் மாடலினை கிரீம், கிராஃபைட், மிண்ட் மற்றும் லாவெண்டர் என நான்கு நிறங்களில் அறிமுகம் செய்து இருந்தது.

கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.4 இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8 சான்று, 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

 

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் எல்லோ நிற வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடியும், ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனினை மாதம் ரூ. 3 ஆயிரத்து 379 என்ற மாத கட்டணத்தில் மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.

Tags:    

Similar News