மொபைல்ஸ்

8 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-10-01 04:13 GMT   |   Update On 2022-10-01 04:13 GMT
  • சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் தோற்றத்தில் போக்கோ M5 மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

சியோமி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ M5 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11R மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 5MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாட் சைடுகளை கொண்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனுடன் 10 வாட் சார்ஜர் தான் வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11R அம்சங்கள்:

6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் 700 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13

13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

2MP போர்டிரெயிட் சென்சார்

5MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் வைட், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1099 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 575 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 895 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரத்து 155 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News