மொபைல்ஸ்

வேற லெவல் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி GT7 சீரிஸ்

Published On 2025-05-31 15:07 IST   |   Update On 2025-05-31 15:07:00 IST
  • ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக் மற்றும் ஐஸ்-செ்ஸ் புளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
  • ரியல்மி GT 7 சீரிஸ் மாடல்களை வாங்குபவர்கள் ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை பெறலாம்.

ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T ஆகியவை இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரியல்மி GT சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் ரியல்மி GT 7 Dream Edition உடன் அறிமுகம் செய்யப்பட்டன. இது ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e சிப்செட் கொண்டிருக்கிறது. ரியல்மி GT 7T மீடியாடெக் டிமென்சிட்டி 8400-Max சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இவை 120W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளன. ரியல்மி GT 7 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ரியல்மி GT 7T இரட்டை பின்புற கேமரா அலகு பெறுகிறது.

இந்தியாவில் ரியல்மி GT 7, ரியல்மி GT 7T விலை, விற்பனை சலுகைகள்

ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T தற்போது ரியல்மி இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரியல்மி GT 7 இன் விலை 8GB + 256GB மெமரி மாடல் ரூ. 39,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் ரூ. 42,999 மற்றும் 12GB + 512GB ரூ. 46,999 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக் மற்றும் ஐஸ்-செ்ஸ் புளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 3,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடி, ரூ. 5,000 வரை தள்ளுபடி பெறலாம்.

மறுபுறம், ரியல்மி GT 7T ஸ்மார்ட்போன் 8GB RAM + 256GB மாடல் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதன் 12GB+256GB மற்றும் 12GB+512GB மாடல்கள் விலை முறையே ரூ. 37,999 மற்றும் ரூ. 41,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக், ஐஸ்-சென்ஸ் புளூ மற்றும் ரேசிங் யெல்லோ வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி நிறுவனம் ரூ. 3,000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ. 6,000 வரை (எக்சேஞ்ச் தள்ளுபடி) வழங்குகிறது.

ரியல்மி GT 7 சீரிஸ் மாடல்களை வாங்குபவர்கள் ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை பெறலாம். ரியல்மி GT 7-க்கான மாத தவண ரூ. 4,444-இல் தொடங்குகின்றன, மேலும் ரியல்மி GT 7T-க்கு ரூ. 3,889 ஆகும். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 1,199 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

ரியல்மி GT 7, ரியல்மி GT 7T அம்சங்கள்

ரியல்மி GT 7 மற்றும் GT 7T இரண்டும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி UI 6.0 உடன் வருகின்றன மற்றும் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன. இவை 120W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை நான்கு வருட OS அப்டேட் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட் பெறும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் 1.5K (1,264×2,780 பிக்சல்) AMOLED டிஸ்ப்ளே 6,000 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. மறுபுறம், ரியல்மி GT 7T அதே அளவிலான பீக் பிரைட்னஸ் மற்றும் ரிப்ரெஷ் ரேட் உடன் 6.80-இன்ச் (1,280×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400e சிப்செட், ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகியுள்ளது, அதே நேரத்தில் ரியல்மி GT 7T, டிமென்சிட்டி 8400-மேக்ஸ் சிப்செட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 12 GB ரேம் மற்றும் 512 GB வரை மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX906 சென்சார், 50MP S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ரியல்மி GT 7T ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX896 சென்சார் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா உள்ளது.

Tags:    

Similar News