மொபைல்ஸ்

அசத்தல் அம்சங்களுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2022-10-04 04:15 GMT
  • ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
  • ஒப்போ A17 ஸ்மார்ட்போன் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி கொண்டிருக்கிறது.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A17 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒப்போ A17 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ ஸ்கிரீன், 5MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புற பேனலில் ஒற்றை பௌக்ஸ் லெதர் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. IPX4 சான்று பெற்று இருக்கும் ஒப்போ A17 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஒப்போ A17 அம்சங்கள்:

6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்

IMG PowerVR GE8320 GPU

4 ஜிபி ரேம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் சென்சார்

5MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஒப்போ A17 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News