மொபைல்ஸ்

ஆரம்பமே அசத்தல்.. சூப்பர் சலுகைகளுடன் துவங்கும் நார்டு CE 3 5ஜி விற்பனை

Published On 2023-08-01 12:52 IST   |   Update On 2023-08-01 12:52:00 IST
  • ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்டு CE 3 5ஜி 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 3 5ஜி மற்றும் நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை 15-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நார்டு CE 3 5ஜி மாடல் விற்பனை இதுவரை துவங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் இந்திய விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வங்கி சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவைகளை சேர்த்து ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

 

ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அம்சங்கள்:

6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2412x1080 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்

அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

அதிகபட்சம் 256 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

50MP பிரைமரி கேமரா

8MP அல்ட்ரா வைடு கேமரா

2MP மேக்ரோ லென்ஸ்

16MP செல்பி கேமரா

ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 13.1

டூயல் சிம்

5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags:    

Similar News