மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புது மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2024-04-16 10:25 GMT   |   Update On 2024-04-16 10:25 GMT
  • 12 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G64 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.5 இன்ச் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G64 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP ஆட்டோபோக்கஸ் அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் டர்போ சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

 


மோட்டோ G64 5ஜி அம்சங்கள்:

6.5 இன்ச் 2400x1080 FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸர்

IMG BXM-8-256 GPU

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ்.

50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

8MP அல்ட்ரா வைடு/ மேக்ரோ / டெப்த் கேமரா

16MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

30 வாட் டர்போ சார்ஜிங்

மோட்டோ G64 5ஜி ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன், பியல் புளூ மற்றும் ஐஸ் லிலாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News