மொபைல்ஸ்

விரைவில் அறிமுகமாகும் புது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் - இணையத்தில் லீக் ஆன புது தகவல்

Published On 2023-01-19 05:21 GMT   |   Update On 2023-01-19 05:21 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
  • புது 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G53 மற்றும் G73 ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மோட்டோ G53 அம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி மோட்டோ G53 மாடலில் 6.53 இன்ச் IPS LCD பேல், HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MyUX ஒஎஸ் வழங்கப்படுகிறது. மோட்டோ G53 மாடலில் 8MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது.

இதுதவிர 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இ-சிம் வசதி, என்எஃப்சி மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் மோட்டோ G53 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய மோட்டோ G53 ஸ்மார்ட்போனின் விலை 209 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 349 வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புளூ, பேல் பின்க் மற்றும் ஆர்க்டிக் சில்வர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News