- மோட்டோரோலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய மோட்டோ G53 5ஜி மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மோட்டோரோலா நிறுவனம் பல்வேறு மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மோட்டோ G13, மோட்டோ G23, மோட்டோ G53 மற்றும் மோட்டோ G73 5ஜி போன்களின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பலமுறை இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது மோட்டோ G53 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டர் பரஸ் குக்லனி மற்றும் மைஸ்மார்ட்-ப்ரைஸ் இணைந்து இதனை வெளியிட்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட்போனின் ரிடெயில் பாக்ஸ் படங்களும் வெளியாகி உள்ளன. முன்னதாக மோட்டோ G23 ரெண்டர்கள் லீக் ஆன நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் அதன் சீன மாடல் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் ஹார்டுவேர் அம்சங்கள் சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மோட்டோ G53 5ஜி மாடலில் செவ்வக கேமரா மாட்யுல், எல்இடி ஃபிலாஷ் உள்ளிட்டவை காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்க் புளூ நிறம் கொண்டிருக்கிறது.
மோட்டோ G53 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய மோட்டோரோலா மோட்டோ G53 5ஜி மாடலில் 6.53 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1600x720 பிக்சல், பன்ச் ஹோல் கட்அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ GPU, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ G53 5ஜி மாடல் 180 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதன் ரிடெயில் பாக்ஸ் விவரங்களின் படி மோட்டோ G53 5ஜி ஸ்மார்ட்போனுடன் சார்ஜிங் அடாப்டர், யுஎஸ்பி டைப் சி கேபிள், சிம் எஜெக்டர் டூல் மற்றும் போன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் புக்லெட் இடம்பெற்று இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பிலாஸ்டிக் கவரில் உள்ள விவரங்களின் படி இந்த மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் "XT2335-2" எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இது சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியாகி இருக்கிறது.
Photo Courtesy: MySmartPrice