மொபைல்ஸ்

ரூ. 51 ஆயிரத்திற்கு விற்கப்படும் ஐபோன் 14 - எப்படி தெரியுமா?

Published On 2022-11-29 04:26 GMT   |   Update On 2022-11-29 04:26 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 14-க்கு இத்தனை சலுகைகள் கிடைக்கின்றன.

ஐபோன் வாங்குவோர் பலருக்கும் மனதில் எழும் முதல் சந்தேகம், முற்றிலும் புதிய ஐபோன் 14 வாங்கலாமா அல்லது ஐபோன் 13, ஐபோன் 12 என சற்று பழைய மாடல்களை வாங்கலாமா என்பது தான். இது பற்றிய தெளிவு கிடைக்க ஐபோன் 14 டிசைன் மற்றும் அம்சங்கள் கிட்டத்தட்ட ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

எனினும், ஐபோன் 14 மாடலில் 5-கோர் GPU கொண்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி எஸ்ஒஎஸ் வசதி, கிராஷ் டிடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் புதிய ஐபோன் 14-இல் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை எதுவும் ஐபோன் 13 மாடலில் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிநவீன மாடல் ஐபோன் 14 தான்.

இதுதவிர ஐபோன் 14 மாடலுக்கு ஆன்லைன் வலைதளங்களில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் "பிளாக் ஃபிரைடே சேல்" அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோன் 14 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

ப்ளிப்கார்ட் சலுகை விவரங்கள்:

தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகையின் கீழ் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. இந்த விலை ஐபோன் 14 (128 ஜிபி) மாடலுக்கானது ஆகும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ஐபோன் 14 விலையில் ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 (128 ஜிபி) விலை மேலும் குறைந்து ரூ. 72 ஆயிரத்து 400-க்கு கிடைக்கும்.

இவை தவிர ஐபோன் 14 வாங்குவோர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் சலுகையில் முழு தள்ளுபடியை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 51 ஆயிரத்து 900 என மாறி விடும். எனினும், எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

Tags:    

Similar News