தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

அப்துல் கலாமின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை - முதலமைச்சர் விஜய்

* இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தவர்.

* மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்.

"ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை.." உளறிக்கொட்டிய ரேகா குப்தா - வீடியோ பகிர்ந்து ஆம் ஆத்மி விமர்சனம்

*ரேகா குப்தா ராமனை கொல்கிறார், அதே நேரத்தில் மோடி ஜி ஏற்கனவே ராமராஜ்ஜியத்தை கொன்றுவிட்டார்=

*ரேகா குப்தா வாய்தவறி பேசுவது இது முதல் முறை அல்ல.

GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் - இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையாகிறது.

* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

கோவையில் பெரியார் நூலகம் - நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

* நாளை திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு நூலகம் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு காலை 11 மணிக்கு வருகிறார். 

அமெரிக்காவில் விமான விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி

*விமானத்தில் இருந்து 6 உடல்களை கண்டெடுத்தனர்.

*உயிரிழந்த 6 பேரின் அடையாளமும் வெளியிடப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து முதல் முறை.. ஹார்முஸில் 2,500 டேங்கர்களுடன் சென்ற கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியதால் பரபரப்பு

*கடலில் மிதக்கும் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த டேங்கர்கள் மற்ற கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்

*அவற்றிலிருந்து விலகி இருக்குமாறு ஐ.ஆர்.ஜி.சி வலியுறுத்தியது.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.53,000 கோடி நிதி.. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற தகுதிகள் தளர்வு - இந்திரா காந்தி பெயரை நீக்க முடிவு

*கால அளவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

*மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பிலிருந்தே இந்த நிதிப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

ஆளுநர் - அங்கிதா பண்டாரி சர்ச்சை: மகளுக்கு நீதி கேட்டு இந்தியா கேட்டில் போராடிய பெற்றோர் கைது

*அங்கிதா பண்டாரி சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

*எப்படி கவர்னர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷிய ராணுவத்தில் மோசடியாக சேர்க்கப்பட்ட 51 இந்தியர்கள் பலி.. 77 பேர் மாயம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கறார் உத்தரவு

*பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டும்.

* விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIDEO: தனி ஆளாக கஷ்டப்பட்டு சுத்தம் செய்த ஆறு மீண்டும் மாசுபட்டதால் மனமுடைந்த வைரல் இளைஞர்

*'தி ஓஷன் கிளீனப்' அமைப்பின் டச்சு தலைமை நிர்வாக அதிகாரியான போஜன் ஸ்லார் அவருக்கு வேலை வழங்க முன்வந்தார்.

*மீண்டும் குப்பைக் குவியலைப் பார்த்த பிறகு பிட்டு பின்வாங்கத் தயாராக இல்லை

ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

* தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

* தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ரூ.130 கோடி முடக்கம்.. ஹவாலா மோசடி அம்பலம் - திருப்பதி லட்டு சர்ச்சையில் வெளிவந்த குட்டு

* திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கலப்பட நெய் வினியோகித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

* போலே பாபா நிறுவனம் ரூ.234.5 கோடி மதிப்பிலான கலப்பட நெய் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

SCROLL FOR NEXT