ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
முதலமைச்சர் விஜய் - ஆளுநர் அர்லேகர்
முதலமைச்சர் விஜய் - ஆளுநர் அர்லேகர்
Published on: 
Summary

ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை கிண்டி மக்கள் மாளிகையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர்தான் முதலமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆர்.வி.அர்லேகர்

தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி கிரண் ரெட்டி தமிழகத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக பேசப்பட்டது. அப்போது பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். அவர் வந்த பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் புதிய ஆளுநராக, அதாவது முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி கடந்த 11-ந்தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அதன்பின்னர் இந்த அதிரடி மாற்றம் நடந்திருந்தது.

முதலமைச்சர் விஜய்

இதையடுத்து, தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை கிண்டி மக்கள் மாளிகையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com