இனவெறி.. அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் முயற்சி - ரைபிள் பழுதால் தப்பிய உயிர்கள் - 19 வயது இளைஞர் கைது

வீட்டிற்குத் திரும்பி, துப்பாக்கியை எவ்வாறு சரிசெய்வது என்று இணையத்தில் தேடியுள்ளார்.
இந்து கோவில் மீது தாக்குதல் முயற்சி
Published on: 
Summary

அமெரிக்காவில் இந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு நடத்த சதித்திட்டம் தீட்டிய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள அரோராவில், இந்து கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்த 19 வயதே ஆன அலெக்சாண்ட்ரோஸ் பாபோராகிஸ் என்ற இளைஞர் திட்டம் போட்டுள்ளார்.

நாச வேலை

அவர் வெள்ளையின வெறி, நியோ நாசிச சித்தாந்தத்தால் தூண்டப்பட்டு இந்த நாசவேலையில் இறங்கியுள்ளார்.

தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), குற்றம் சாட்டப்பட்ட பாபோராகிஸ் ரைபிள் துப்பாக்கியுடன் அரோராவில் உள்ள இந்து கோவிலுக்கு சென்றார்.

ஜாம் ஆன ரைபிள்

யாரும் கவனிக்காத வகையில் அங்கு சுட முயன்றபோது, ​​அவரது ரைபிள் துப்பாக்கி ஜாம் ஆனதால் ஏமாற்றம் அடைந்த அவர் வீட்டிற்குத் திரும்பி, துப்பாக்கியை எவ்வாறு சரிசெய்வது என்று இணையத்தில் தேடியுள்ளார்.

இதற்கிடையில், சக ஊழியர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அவரை அன்றைய தினமே (அக்டோபர் 11) கைது செய்தது.

இனவெறி

"நான் ஏன் போராடுகிறேன்?: அரோரா துப்பாக்கி வீரனின் அறிக்கை" என்ற தலைப்பில் 8 பக்க ஆவணத்தை பாபோராகிஸிடமிருந்து காவல்துறை கைப்பற்றியது.

அதில் தெற்காசியாவை சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிராக தீவிர வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ​​ஒரு ஏஆர் ரக துப்பாக்கி, நூற்றுக்கணக்கான, உடல் கவச மேலங்கி மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்தை சித்தரிக்கும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

வழக்கு

பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தல் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரோராவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவிலை தாக்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) ஒரு 'சிறப்பு நாள்' ஆக இருக்கும் என்று அவர் தனது சக ஊழியர்களிடம் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனிடையே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்துள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 30 அன்று நடைபெற உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இந்து அமெரிக்க அறக்கட்டளை கூறுகையில், காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கும் சதியை முறியடித்ததற்கும் பாராட்டு தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com