அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது அ.தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு பதிவு

அவதூறு வழக்கு வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on: 
Summary

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது அதிமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. எம்.பி, ஐ.எஸ்.இன்பதுரை இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இதனை தெரிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த 10-ந்தேதி அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அ.தி.மு.க. மீதும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் 3- வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பி.என்.எஸ். பிரிவு 356-ன் கீழ் இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com