அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது - ஆதவ் அர்ஜுனாவுக்கு இபிஎஸ் பதிலடி

கடந்த தேர்தலைவிட தாராபுரம் தொகுதியில் தவெக குறைந்த வாக்குதான் பெற்றுள்ளது.
 Edappadi Palaniswami
Published on: 
Summary

தவெகவில் ஆள் இல்லாததால் அதிமுகவில் இருந்து கிளைச்செயலாளர்களை அழைத்து குதிரைபேரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது விஜய் தலைமையிலான தவெக அரசு.

* கல்லாபெட்டி கூட்டணி என விஜய் விமர்சித்த விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் கூட்டணியால் தான் முதல்வராக உள்ளார்.

* தேர்தல் நேரத்தில் ஒன்று சொல்லிவிட்டு ஆட்சியமைப்பதற்காக அந்தர்பல்டி அடித்து பேசுபவர் தான் விஜய்.

* அதிமுகவை தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறைத்து மதிப்பிட்டு வருகிறார்.

* அதிமுகவில் இருந்து கிளைச்செயலாளர்கள் வந்துவிடுவார்கள் என கூறிய அமைச்சர் ஆதவ் கனவு காண்கிறார்.

* அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

* அடுத்த கட்சிக்காரர்களை கூவிக்கூவி அழைக்கும் நிலைக்கு தவெக சென்றுள்ளது.

* தவெகவில் ஆள் இல்லாததால் அதிமுகவில் இருந்து கிளைச்செயலாளர்களை அழைத்து குதிரைபேரம் செய்கின்றனர்.

* கரூர் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி கூட செலுத்தாதவர் தான் விஜய்.

* அடுத்த கட்சிக்காரனை அழைத்து தவெகவை வளர்ப்பதற்கு கேவலமாக இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com