

கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் விரிவாக்கத்தின் புதிய கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பட்டரவாக்கத்தில் கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
விழாவில், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கிற்கு பூங்கொத்து கொடுத்து நினைவுப் பரிசு வழங்கி முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.
அப்போது, 4 ஏக்கர் பரப்பளவில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் விரிவாக்கத்தின் புதிய கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் தொடக்க விழாவில் சிங்கப்பூர் துணை பிரதமர், முதலமைச்சர் விஜய் மரக்கன்று நட்டனர்.