

நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற மும்பை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமீர் கானின் மருமகனும் நடிகருமான இம்ரான் கான் சிக்கலில் மாட்டியுள்ளார். அமீர் கான் இம்ரான் கானின் தாய்வழி மாமா ஆவார்
இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறையிடமிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடந்த சிஜேபி போராட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்றார்.
போராட்டத்தின் போது காவல்துறையினர் இம்ரான் கானை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இம்ரான் கான் இந்தியக் குடிமகன் அல்ல. அவர் அமெரிக்க குடியுரிமையை வைத்துள்ளார். அவருக்கு இந்தியாவில் ஓசிஐ அந்தஸ்து மட்டுமே உள்ளது. வெளிநாட்டுக் குடிமக்களோ அல்லது ஓசிஐ அட்டைதாரர்களோ இந்தியாவில் எந்தவொரு அரசியல் போராட்டத்திலும் பங்கேற்க சட்டப்படி அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என பாஜக தலைவர் கிரீட் சோமையா அவர் மீது புகார் அளித்துள்ளார்.
காம்தேவி காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்திற்கும் (FFRO) அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறையிடமிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.