மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக அநீதி - மு.க.ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 
Summary

சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மதத்தை காரணமாகக் காட்டி மறுப்பது சமூக அநீதியாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூகநீதிக்கு எதிரானது

சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த திராவிட மாடல் அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com