வழிபாடு

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம்?

Published On 2025-08-15 11:47 IST   |   Update On 2025-08-15 11:47:00 IST
  • தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர்.
  • தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News