வழிபாடு

கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2025-08-09 09:42 IST   |   Update On 2025-08-09 09:42:00 IST
  • இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
  • 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், யானை, வாகனங்களிலும், மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேவியருடன் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.

பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசாரும், 40 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை தீர்த்தவாரியும், 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News