புதுச்சேரி

புதிய பஸ் நிலையம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

ராகுல் எம்.பி பதவி நீக்கத்தால் இளைஞர் காங்கிரசார் மறியல்

Published On 2023-03-25 08:50 GMT   |   Update On 2023-03-25 08:50 GMT
  • குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

புதுச்சேரி:

குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதிய பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் வக்கீல் மருதுபாண்டி, தனுசு, வேல்முருகன், பஞ்சகாந்தி, சாந்தி, செல்வநாதன், சிலம்பு, கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.

பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னதாக நேற்று நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமையில் காங்கிரசார் காந்தி சிலைக்கு கீழ் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல காங்கிரசார் புதுவை, காரைக்காலில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News