கோப்பு படம்.
பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபர் கைது
- வில்லியனூர் அருகே பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- உருவையாறு சந்திப்பு பஸ் நிறுத்தம் சந்திப்பில் ஒரு வாலிபர் அங்கு நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டி ருந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே உருவையாறு சந்திப்பு பஸ் நிறுத்தம் சந்திப்பில் ஒரு வாலிபர் அங்கு நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டி ருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் மேல்திருக்காஞ்சி புதுநகரை சேர்ந்த மைனா என்ற சசிக்குமார் (வயது23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் நோணாங்கு ப்பம் படகு குழாம் அருகே ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் என்.ஆர்.நகரை சேர்ந்த பவுல்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம் திருவண்ணாமலை சாலையிலும், அங்குள்ள புளியந்தோப்பு பகுதியிலும் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை திருக்கனூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வானூர் அருகே கொடுக்கூரை சேர்ந்த கமலேஷ்(19) மற்றும் விக்கிரவாண்டியை சேர்ந்த மோகன்பிரபு(34) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.