புதுச்சேரி

குளத்தில் தவறி விழுந்து இறந்துபோனவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்ட போது எடுத்தப்படம்.

கோவில் குளத்தில் தவறி விழுந்து சாவு

Published On 2022-06-19 13:47 IST   |   Update On 2022-06-19 13:47:00 IST
  • மதுபோதையில் குளிக்க சென்ற போது கோவில் குளத்தில் தவறி விழுந்து சைக்கிள் கடை ஊழியர் பலி
  • முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது.

புதுச்சேரி:

குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை முத்தியால்பேட்டையில் செங்களுநீரம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அந்த பகுதியில் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதனையறிந்த அப்பகுதியினர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். அப்போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் மஞ்சு நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்தி மருது (38)என்பதும் இவர் அந்த பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்ததும் ெதரியவந்தது.இவர் மது போதையில் குளத்தில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.இறந்து போன சக்தி மருதுக்கு இந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News