புதுச்சேரி

கோப்பு படம்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-08-01 14:37 IST   |   Update On 2022-08-01 14:37:00 IST
  • ஆரியப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்
  • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது45). இவர் லாரியில் செங்கல் லோடு ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு குணா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

ராஜேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ராஜேந்திரன் மனைவியிடம் தகராறு செய்தார்.

இதையடுத்து குணா கணவரிடம் கோபித்துக்கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி கோபித்து சென்றதால் ராஜேந்திரன் மன வருத்தமடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ராஜேந்திரன் இரவு வீட்டின் கூரையில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி குணா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News