புதுச்சேரி

 வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கும்மி அடித்து வழிபட்ட பெண்கள்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் கும்மி அடித்து வழிபட்ட பெண்கள்

Published On 2023-08-30 13:48 IST   |   Update On 2023-08-30 13:48:00 IST
  • திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
  • பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெரு மாளுக்கு நடத்தப்படுவது வழக்கம். இதனையொட்டி, காலை 8 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடை பெற்றது.

இதன் முக்கிய நிகழ்வாக, இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற்றது.

உற்சவத்தில் திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாள் திருக்கல்யா ணத்தை கண்டு தரிசனம் செய்தால் திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது கோவிலின் சிறப்பு என்பதால் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கும்மி அடித்து வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News