சென்னையில் அஞ்சல் துறை நடத்திய போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த விவேகானந்தா மாணவர்களை செல்வகணபதி எம்.பி. பாராட்டினார்.
விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் வெற்றி
- அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது.
புதுச்சேரி:
அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது. சென்னையில் நடந்த இந்த போட்டியில் புதுவை அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா பள்ளி சி.பி.எஸ்.இ. யில் 11-ம் வகுப்பு படித்து வரும் அமிர்தா முதலிடத்தையும், பரத் ஜெயின் 2-ம் இடத்தையும், 9-ம் வகுப்பு படித்து வரும் யுவான் செலீன் ஷாரன் வில்சன் 3-ம் இடத்தையும் வென்றனர்.
முதல் 3 இடங்களையும் பிடித்த மாணவர்களுக்கு இந்திய அஞ்சலக த்துறை சார்பாக அஞ்சலக முதன்மைத் தலைவர் காசோலை வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் சரண்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.