புதுச்சேரி

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார்

பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-06-15 10:52 IST   |   Update On 2022-06-15 10:52:00 IST
  • தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே கிராம பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் அருகே என்.ஆர்.நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் என்.ஆர். நகரில் ஒரு தனிநபர் தனக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சுற்றுசுவர் அமைப்பதின் மூலம் மழை நீர் மேலும் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படும் என கருதிய அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து இன்று காலை புதுவை-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதோடு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அப்பகுதி மக்களிடம் செல்போனில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News