கோப்பு படம்.
மத்திய பட்ஜெட் மக்களை ஏமாற்றியுள்ளது-நாராயணசாமி குற்றச்சாட்டு
- புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
- மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு விதை, உர மானியம், இலவச மின் திட்டம் இல்லை. நெல், வாழை, கரும்பு விலையில் எந்த மாற்றமும் இல்லாத விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். இதில் ரூ.13 லட்சம் கோடி வெளிசந்தையில் கடன் வாங்குவதாக உள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும்.
நிதி பற்றாக்குறை 5.9 சவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை உருவாக்கி விலைவாசியை உயர்த்தும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். ரூ.4 லட்சம் கோடியில் நெடுஞ்சாலை துறை பணிகள் தொடங்கி கிடப்பில் உள்ளது.
பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான எந்த முகாந்தரமும் இல்லை. பல எதிர் பார்ப்புகளோடு இருந்த அரசு ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் பணம் படைத்தோருக்கும், நாட்டில் உள்ள ஒரு சதவீத மிகப்பெரிய முதலாளிக்கும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டு மக்களை மத்திய அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.