விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு ஆரோவில் காவல் நிலையம் அருகே உள்ள வேதபுரீஸ்வரர் நகர் பகுதியில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி ரூபினி யோகஸ்ரீ லலிதாமஹா திரிபுரசுந்தரி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வசனம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மருத கிரக ஹோமம், அக்னி சங்கரனம் உள்ளிட்ட யாகசாலை அலங்காரத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்றது காலை 4-ம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் விமர்சித்து ரக்ஷா பந்தனம் தொடர்ந்து 4-ம் கால பூர்ணாகதி தீபாதனை, யாத்ரா தான, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதனைத் வேத மந்திரங்கள் முழங்க விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சக்தி சாமிகள் கலந்து கொண்டு விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினார்.
தொடர்ந்து வல்லபவிநாயகர், பாலமுருகன் யோக லலிதா மஹா திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் இஷ்ட தெய்வமான வாராஹி மற்றும் சிவன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷா பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.