புதுச்சேரி

பெத்தி செமினார் பள்ளி முப்பெரும் விழாவையொட்டி ராட்சத பலூன் பறக்க விடப்பட்ட காட்சி.

பெத்தி செமினார் பள்ளியில் முப்பெரும் விழா

Update: 2023-02-04 07:54 GMT
  • புதுவையில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 1792-ம் ஆண்டு குருமடமாகவும், கல்லூரியாகவும் தொடங்கப்பட்டது.
  • 1934-ம் ஆண்டு முதல் குழு மாணவர்கள் தேர்வை சந்தித்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி ெதாடங்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்து 646 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 1792-ம் ஆண்டு குருமடமாகவும், கல்லூரி யாகவும் தொடங்க ப்பட்டது. இப்போது அமைந்துள்ள இப்பள்ளி 1844-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1846 மார்ச் 19-ந் தேதி பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பள்ளி தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. 1932-ம் ஆண்டு இப்பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

1934-ம் ஆண்டு முதல் குழு மாணவர்கள் தேர்வை சந்தித்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி ெதாடங்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்து 646 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

220 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த பெருபான்மையான மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங், சட்டம் என தொழில் சார்ந்த கல்வி கற்று சாதனை படைத்து வருகின்றனர்.

புதுவையில் பெத்தி செமினார் தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான விழா வருகிற 6-ந் தேதி ெதாடங்கி 8-ந் தேதி வரை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 175-வது ஆண்டு விழாவின் முதல் நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5.15 மணியளவில் உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளியில் ஐதராபாத் பேராயர் கர்த்தினல். அந்தோணி பூலே தலைமையில் நடக்கிறது.

புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட், செங்கல்பட்டு மாவட்ட ஆயர் டாக்டர் நீதிநாதன், சேலம் மாவட்ட ஆயர் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் ஆகியோரும் அருட்பணியாளர்களும் கலந்து கொண்டு நன்றி கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

இதில் அருள் சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள, மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

2-ம் நாள் 175-வது பள்ளி ஆண்டு விழா 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணியளவில் உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்துரை வழங்குகிறார்.

புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆசீர் உரையாற்றுகிறார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், வைத்திலிங்கம் எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப முதன்மை அதிகாரி ராபர்ட் ஜெரால்டு ரவி, தென் மண்டல இயக்குனர் (சுற்றுலாத்துறை) முகமது பாருக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் உதவி தந்தை ஜீவா எட்வர்ட் எடிசன் ஆகியோர் செய்துள்ளனர்.

3-ம் நாள் விழா 8-ந் தேதி மாலை 6 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 175-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.

இதில் 1950-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News