புதுச்சேரி

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா பயிற்சியை தொடங்கி வைத்த காட்சி.

சமுதாய கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி

Published On 2023-03-15 14:07 IST   |   Update On 2023-03-15 14:07:00 IST
  • தன்னார்வ தொண்டர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வி மூலம் இளைஞர் மேம்பாடு என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சியை நடத்தியது.
  • புதுவையை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரி காட்சி தொடர்பு துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவர்கள், என்.எஸ்.எஸ். தன்னார்வ தொண்டர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வி மூலம் இளைஞர் மேம்பாடு என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சியை நடத்தியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா பயிற்சியை தொடங்கி வைத்தார்.

புதுவையை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் லலிதாராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News