புதுச்சேரி

கோப்பு படம்

கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம்

Published On 2022-08-12 08:39 GMT   |   Update On 2022-08-12 08:39 GMT
  • பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.
  • இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டான்.

புதுவை லாஸ்பேட்டை சாந்தி நகரில் ரேணுகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டி யல் உடைக்கப்பட்டு காணிக்கைப்பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.

உண்டியலில் சுமார் ரூ.2 ஆயிரத்துக்கும் மேலாக காணிக்கை பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகி பரமசிவம் இதுபற்றி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணிந்த ஒரு வாலிபர் கோவில் உண்டி யலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News