புதுச்சேரி

கோப்பு படம்

முதியவர் தூக்கு போட்டு சாவு

Published On 2022-06-22 14:41 IST   |   Update On 2022-06-22 14:41:00 IST
  • தட்டாஞ்சாவடியில் முதியவர் தூக்கு போட்டு இறந்து போனார்.
  • இவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் ரமேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

தட்டாஞ்சாவடியில் முதியவர் தூக்கு போட்டு இறந்து போனார்.

புதுவை தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரும், இவரது மனைவியும் புதுவை மிஷன் வீதியில் உள்ள தனியார் வாட்சு கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது தந்தை ரங்கசாமி(வயது82). தாய் கலா(75). இவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் ரமேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக ரங்கசாமி இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பால் ரங்கசாமி அவதியடைந்து வந்தார். இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ரமேஷ் வழக்கம் போல் தனது மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலையில் எதிர்வீட்டை சேர்ந்த உமாகாந்தன் என்பவர் ரமேசுக்கு போன் செய்து உனது தந்தை வீட்டின் மாடியில் உள்ள கூரையில் தூக்கு போட்டு தொங்குவதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமேஷ் தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரமேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News