புதுச்சேரி

கோப்பு படம்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகள் ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்

Published On 2023-09-12 15:07 IST   |   Update On 2023-09-12 15:07:00 IST
  • தலித் விடுதலை பேரவை முதலமைச்சருக்கு கோரிக்கை
  • பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை வேறு தொகுதி அல்லது கொம்யூன் அளவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமையில் பொதுச்செயலாளர் பொன்னிவேல், பேரவை தலைவர் முருகையன், அமைப்புச் செயலாளர் கண்ணன், ஒருங்கி ணைப்பாளர் மகேந்திர வேலன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன், துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது :-

புதுவை அரசு பள்ளி களில் உள்ளூர் ஆசிரி யர்களை நியமிக்க கூடாது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை வேறு தொகுதி அல்லது கொம்யூன் அளவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். புதுச்சேரி பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியில் 15 ஆயிரம் காலி இடங்களை உடனே நிரப்புவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. வேலை கிடைக்காமல் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். தற்பொழுது பணி ஓய்வு பெற்ற ஆசிரி யர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதை கண்டிக்கின்றோம்.

படித்த பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்காக காத்துக்கி டப்பவர்களை குறைந்தபட்ச சம்பளத்தி லாவது பணியில் அமர்த்த வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 70-க்கும் மேற்பட்ட காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News